விரைவில் கொண்டு வரப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்களில் மாற்றம்



சாரதி அனுமதிப்பத்திரம் டிஜிட்டல் முறையில்   அறிமுகப்படுத்தப்படுவுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கிலே இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த டிஜிட்டல் அனுமதி பத்திரத்தை கையடக்க தொலைபேசி மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து தரவுகளும் சேர்க்கப்படும் என அவர் தெரிவித்தார்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்