பெட்ரோலின் விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பெட்ரோலிய கூட்டுத்தாவணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய லங்கா பெட்ரோல் 92 ஒக்டேனின் விலை 370 ரூபாயிலிருந்து 30 ரூபாய் அதிகரித்துள்ளது.
புதிய விலையாக ஒரு லீட்டருக்கு 400 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஏனைய ரக பெட்ரோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகள் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என அறிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்திகள்



