19 வயது யுவதியை வன்புணர்வு செய்த இருவர் கைது

 

tamillk.com



மோட்டார் சைக்கிளில் சென்ற 19 வயது யுவதியை வன்புணர்வு செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.


அனுராதபுரம் நகர எல்லையில் வசிக்கும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


யுவதியின் தந்தை இறந்ததையடுத்து, அவரது தாயார் மறுமணம் செய்து கொண்டதாகவும், ஒரு நாள் அவரது தாயாரால் தாக்கப்பட்டதாகவும், காதுகேளாமை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, சிறுவர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


பின்னர், 18 வயது நிறைவடைந்ததன் பின்னர், பதுளை பிரதேசத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு வந்த அவர், வாடகை வீட்டில் இருந்து உணவகம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்திற்கு முகம் கொடுத்த யுவதி தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


அநுராதபுரம் தலைமையக பிரதான பரிசோதகர் கபில அதிகாரியின் பணிப்புரையின் பேரில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்