முட்டை சங்க தலைவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது

 

tamillk news

முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் திரு.சரத் ரத்நாயக்கவுக்குச் சொந்தமான பண்ணை ஒன்று அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமைக்காக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


குருநாகல் மாவட்டத்தின் கொபேகனே, மிரிஹானேகம, ஔலேகம மற்றும் பிங்கிரிய பிரதேசங்களில் நேற்று அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.


கொபேகனே பிரதேசத்தில் இயங்கி வந்த திரு.சரத் ரத்நாயக்க என்பவருக்குச் சொந்தமான முட்டைப் பண்ணையில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்டதை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்