ராஜபக்சர்களின் சொத்துக்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் முடக்கப்பட்ட மற்றும் இறுக்கப்பட்டு வருவதாக இந்தியாவின் இராணுவத்தின் முன்னாள் மேஜர் அதிகாரி மதன்குமார் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
13வது சீர்திருத்தம் என்பது இரு நாடுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் இரு நாட்டுத் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் ஜெயவர்த்தன அவர்களும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
அதேபோன்று இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கு தார்மீக பொறுப்பு உள்ளதாகவும் ஆனால் அதனை மிகவும் தாமதித்துவிட்டார்கள். இந்த தாமதமானது முப்பது வருடங்களுக்கு தாமதமாக விட்டார்கள்.
தற்போது இலங்கையில் எந்தவொரு அரசியல்வாதியும் சீனாவின் அடிமையாக போய்விடுகிறேன் மற்றும் சீனாவின் ஆதரவில் இருக்கலாம் என்று கூறிக்கொண்டு அரசியலை நடத்த முடியாது.
ராஜபக்சர்களின் ஆட்சி காலத்தில் 80 சதவீதத்தில் செல்வாக்கு காணப்பட்டது. தற்போதைய நிலையில் 8 சதவீதமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் உள்ள ராஜபக்சர்களின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கப்பட்டும் மற்றும் இருக்க ஆரம்பித்துள்ளார்கள். அதேபோன்று ஆப்பிரிக்காவில் உள்ள தொழிற்சாலைகளையும் தற்போது இறுக்குகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.