srilanka tamil news
இலங்கைக்கு கிடைக்கப்பட்டுள்ள சர்வதேச நாணயத்திடமிருந்து வாய்ப்பை இழந்தால் இறுதியில் இலங்கை லெபனான் போன்று மாறிவிடும் என பேராசிரியர் ரொஹான் சமரஜீவ எச்சரித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது பேராசிரியர் கருத்துகளை வெளியிட்டார்.
மேலும் அவர் கருத்துக்களை தெரிவித்த போது.
லெபனானில் இருக்கும் அரசியல் தரப்பினர் தங்கள் ஒருமித்த கருத்தை அடைய முடியாத நிலையில் வங்கி நடைமுறையில் செயல்படுத்த முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று லெபனானில் மக்கள் தங்களுடைய குறைந்தபட்ச வங்கியில் இருந்து பணத்தை கூட எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சிலர் பொம்மை துப்பாக்கியுடன் வங்கியில் குதித்து தமது பணத்தை கேட்பதாகவும் கூறப்பட்ட நிலையில் இந்த செயல்பாடு ஆனது எந்த ஒரு நாட்டுக்கும் விரும்பத்தகாத ஒன்றாகும். இவ்வாறான நிலைமை இலங்கைக்கு தவிர்க்க வேண்டும்.
இலங்கை நாட்டின் உற்பத்தி திறனை மேலும் அதிகரிக்க வேண்டும். மேலும் ஏற்றுமதி மேம்படுத்தாமல் இந்த நெருக்கடியான நிலையில் இருந்து வெளியேற முடியாதென்று அவர் கூறினார்.



