தஜிகிஸ்தானின் நோவோபோடில் இருந்து வடமேற்கே 51 கிமீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதற்கிடையில், மார்ச் 21 இரவு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் 6.5 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வட இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் இந்த அதிர்ச்சி உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கம் காரணமாக இரு நாடுகளிலும் கிட்டத்தட்ட 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags:
world news



