சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் தொகை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக செயற்குழு இன்று (மார்ச் 20) அமெரிக்க நேரப்படி இரவு 10:00 மணிக்கு கூடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் மாநாடு நாளை (மார்ச் 21) இலங்கை நேரப்படி காலை 8.30 மணியளவில் நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்ட தொகையான 320 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 4 வருடங்களில் 8 தடவைகள் உரிய மொத்த தொகை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் திரு.சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.