இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை பற்றிய சிறப்பு அறிவிப்பு

tamillk.com


 பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரையான மாணவர்களை உள்வாங்குவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.


தரம் 2 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு (6ம் வகுப்பு நீங்கலாக) சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அந்தந்த பள்ளிகளுக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி கிடைக்கக்கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பாடசாலைகள் மேற்கொள்ளும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு இனி வெளியிடாது என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்