தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

 

tamillk.com

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் இன்று (11) அதிகாலை 5.30 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது.


கொழும்பில் இருந்து காலி நோக்கி பௌசரா ட்ரக் ஒன்று சீமெந்து பொடியை ஏற்றிச் சென்றது.


வாகனத்தின் சாரதி மற்றும் உதவி சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


இந்த விபத்தில் வாகனம் மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலியும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


காயமடைந்த இருவரும் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்