![]() |
திருகோணமலை பாடசாலைக்கு அருகில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது ! Tamillk News |
திருகோணமலை- கந்தளாய் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார்.
நேற்று(13.09.2023) இரவு சந்தேகநபரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் திருகோணமலை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபரை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 5 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கந்தளாய் - முதலாம் கொலனியில் வசித்து வரும் 44 வயதையுடைய அப்துல்லாஹ் முகமட் ரிஹான் என தெரியவருகிறது.
மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Trincomalee Tamil News