(vavuniya tamil news) வவுனியாவில், மன்னார் வீதியில் பட்டா வாகனத்துடன் துரிச்சக்கர வண்டியுடன் மோதி மாணவர் ஒருவர் விபத்துக்குள்ளானார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இன்று (23) வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் யாழ் ஐஸ்றீம் வீதியை திரும்ப முயன்ற போது அதே திசையில் வந்து கொண்டிருந்த பட்டா வாகனம் சாரதி தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மாணவனை மோதுண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மாணவன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சாரதி இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது மாணவனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதால் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்து குறித்து வவுனியா நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்..



