நெடுந்தீவில் ஐவரை படுகொலை செய்த பிரதான சந்தேகநபர் வாக்குமூலம்

tamillk.com

(Jafnna tamil news) நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமான கொலை செய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தில்

"அவர்களின் வீட்டில் தான் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவைப்பட்டதாக இருந்ததால் அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரிக்க முடிவெடுத்தேன். தனியாக தங்க நகைகளை மட்டும் கொள்ளையடித்தால் பிடிபட்டு விடுவார்கள் என சம்பவத்தை திசை திருப்பவே அவர்களை கொலை செய்தேன்" என கைது செய்யப்பட்டவர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இவேளை சந்தேகநபரிடமிருந்து 26 தங்கப் பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தின் 12 ஆம் வட்டாரத்தின் அண்மையில் வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த போது சந்தேகநபரை 22 ஆம் திகதி புங்குடுதீவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஜெர்மனியில் கொலை முயற்சி வழக்குகளில் குற்றவாளியாக கண்டறிந்து இலங்கை நாட்டிற்கு கடத்தப்பட்ட 51 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட போது சந்தேக நபர் தானே இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டதால் சந்தேக நபரை நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்று ஏனைய சான்றுகளை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை சந்தேக நபரை ஊர்காவல்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்