(srilanka tamil news) சுமார் இரண்டு மாதங்களாக வனவிலங்கு கால்நடை மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்த தல கோட்டா யால தேசிய பூங்காவில் உள்ள மிகப்பெரிய தந்த யானை லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதை வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இறக்கும் போது சுமார் 40 வயதுடைய இந்த யானை யால தேசிய பூங்காவின் வலய இலக்கம் 06 இல் அதிகளவில் வசித்து வந்துள்ளது.
கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்த இந்த யானை யால தேசிய பூங்காவில் உள்ள மிகப்பெரிய யானையாகும். பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த ஒன்றாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
srilanka



