நாட்டிற்கு அனுப்பப்படவிருந்த 2000 கிலோ கஞ்சா இந்தியாவில் பிடிபட்டுள்ளது

indian-srilanka-tamil news-56238


 இந்தியாவில் இருந்து இலங்கையின் வடக்கு கடல் எல்லைக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த 2090 கிலோ கேரளா கஞ்சாவை 6 பேர் மற்றும் இரண்டு வாகனங்களுடன் கைது செய்துள்ளதாக இந்தியாவின் கெரைத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மதுரை புதுக்குளம் பகுதியில் பெரிய அளவில் கேரள கஞ்சா கடத்தப்படுவதாக கீரைத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், புதுக்குளத்தில் தென்னந்தோப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரியை அதிகாரிகள் குழு சோதனையிட்டது.



அப்போது லாரியில் இருந்தவர்கள் சர்க்கரையை ஏற்றிச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்தனர். சர்க்கரை மூட்டைகளை அகற்றி பார்த்தபோது, ​​சர்க்கரை மூட்டைகள் போன்று தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல சாக்கு மூட்டைகள் இருந்ததில், 2000 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்