பெண் ஊழியர் மீது முல்லைத்தீவில் பாலியல் பலாத்கார முயற்சி

Mullaitivu-tamil news-tamillk


முல்லைதீவில் மனிதநேய கன்னிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் குடும்பப்பெண் ஒருவரை பாலியில் பலாத்காரம் செய்வதற்கு முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


 இந்த சம்பவமானது நேற்றைய தினம் 15.05.2023 பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு காட்டுப்பகுதிக்குள்  கன்னிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த பெண் ஊழியரை அடையாளம் தெரியாத இரு நபர்கள் காட்டுக்குள் கடத்திசென்று பாலியல் பலாத்காரம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.


இதனையடுத்து குறித்த பெண் இருவரின் பிடியிலிருந்து அங்கிருந்து தப்பிச் சென்று தன்னுடன் பணியாற்றும் ஏனையவர்களை அழைத்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்பு காட்டுப்பகுதியில் பெண்ணை கடத்திய இருவரும் தப்பிச் சென்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக மேலதிய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்