வடமராட்சி கிழக்கு அம்மன் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவது.
குறித்த நபர் இரவு தோட்ட காவலுக்கு செல்வதாக வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிள் உடன் வெளியேறிய நிலையில் அம்பன் சமுர்த்தி வங்கிக்கு முன்பாக பாலாத்துடன் மோதி பாலத்திற்கு அடியில் வீசப்பட்டுள்ளார்.
இந்த விபத்தானது இரவு வேளையில் இடம் பெற்றதால் அவ்வழியாக யாரும் செல்லாத காரணத்தால் வெகு நேரமாக விபத்தாகியும் குறித்த நபர் கடுமையான காயங்களுடன் இருந்துள்ளார்.
இவரின் அதிர்ஷ்டவசமாக வழியாக வந்த இளைஞர் ஒருவர் விபத்தாகி இருப்பதை அவதானித்து உடனடியாக 1990 நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பொதுவான வைத்தியசாலைக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளார்.



