( srilanka tamil-tamillk ) நேற்று கட்டுநாயக்கா விமான நிலைய வளாகத்துக்குள் வைத்து சார்ஜா நோக்கி பயணம் செல்வதற்கு வந்திருந்த கனேடிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட தம்பதியினரிடம் இருந்து தோட்டாவின் உறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கம்போடியா பயணத்தின் போது இந்த வெற்று தோட்ட உறையை எடுத்து வைத்துக் கொண்டதாக இந்த கனேடிய தம்பதி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இவ்வாறானவற்றை கம்போடியாவுக்கு வரும் எவரும் எடுக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக மேலும் நடவடிக்கைகள் அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
Tags:
srilanka



