பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சம்பவத்தில் களனியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
துப்புரவு தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க வந்தபோது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் டி-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
srilanka



