பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை நாட்டை சேர்ந்த பாதாள உலகம் குடு அஞ்சு என்ற குற்றவாளியை நாடு கடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பிரான்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளியான குடு அஞ்சு என்பவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஆவணங்களும் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கையளிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பிளான்ஸ் பொலிஸாரால் ஆராய்ந்த பின்னர் குடு அஞ்சுவை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு கடத்தப்பட இருக்கும் குடு அஞ்சு ஒரு சில வாரங்களில் நாடு
கடத்தப்படுவார் என உயர் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
Tags:
srilanka



