"அடுத்த 5 ஆண்டுகளில் வரிச்சுமை 119 வீதத்தால் அதிகரிக்கும்" - பேராசிரியர் வசந்த அத்துகோரல

 

tamillk

(srilanka tamillk tamil news) எதிர்வரும் ஐந்து வருடங்களில் இலங்கையில் ரூபாவின் பெறுமதி குறைவடையும் மற்றும் வரிச்சுமை நூற்று பத்தொன்பது வீதத்தால் (119%) அதிகரிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். தனிநபர் கடன் 13 லட்சத்தில் இருந்து 19 லட்சமாக உயரும்.


தனிநபர் கடன் தொகை 19 இலட்சமாக அதிகரிப்பது தற்போதைய தனிநபர் கடன் தொகையை விட கிட்டத்தட்ட 6 இலட்சம் ரூபா அதிகரிப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


2022 மற்றும் 2028 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பணத்தின் பெறுமதியை ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டு 1000 ரூபாவின் பெறுமதி 2028 ஆம் ஆண்டளவில் 567 ரூபாவாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


2023 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை மக்கள் மீது 119 வீத வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளமை இதில் மிகவும் ஆபத்தான அம்சம் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.


மேலும், 2022ஆம் ஆண்டளவில் இலங்கையின் வரிச்சுமை 27,871 பில்லியன் ரூபாவாக இருக்கும் எனவும், 2028ஆம் ஆண்டு 44,601 பில்லியன் ரூபாவாக இந்நிலைமை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் 2020ஆம் ஆண்டு 691,546 ரூபாவாக இருந்த தனிநபர் கடனின் அளவு 2023ஆம் ஆண்டளவில் 1,336,942 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், 2028ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 1,930,796 ரூபாவாக மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையின் பொருளாதாரம் தற்போது முழுவதுமாக சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் 'மவ்பிம' வினவிய கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் மேலும் கூறுகையில், 2028 ஆம் ஆண்டளவில் இலங்கையின் பொருளாதாரத்தை 2018 இல் இருந்த பொருளாதார நிலைக்கு மாற்ற முடியும்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்