களுத்துறை பகுதியில் சிறுமியின் மரணம் தொடர்பில் தம்பதியர் கைது

 


( srilanka - tamillk tamil news ) களுத்துறை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் உள்ள புகையிரத பாதைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பில் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மற்றுமொருவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


களுத்துறை புகையிரத பாதையை அண்டிய ஐந்து மாடிகள் கொண்ட தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து வீழ்ந்த நிலையில் இந்த பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சிறுமி மற்றுமொரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடன் களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்து இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்