( jaffna tamil news )சிறிதளவு பணம் கிடைக்கும் என்பதற்காக உங்கள் காணிகளை விற்க வேண்டாம் எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (7) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
சில காலங்களில் முன்பு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். தமிழ் பௌத்த சின்னங்களை ஆக்கிரமிப்பதற்காகத்தான் தற்போது பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன. பௌத்தர்களே இல்லாத இடங்களில் அவை கட்டப்பட்டு வருகின்றன.
இங்கு விகாரைகளை கட்டி அதை பராமரிப்பதற்காக ஆட்களைக் கொண்டு வந்து பின்னர் சிங்கள பிரதேசமாகும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
இது தொடர்பாக இந்த ஆட்சியில் பலமுறை நிறுத்துவதற்கான முயற்சிகள் எடுத்த போதும். அதை நிறுத்தப்படவில்லை, ஜனாதிபதிக்கு பலமுறை முறையிட்ட போதும் அது கவனிக்கப்படவில்லை.
இவற்றை நிறுத்துவதற்காக நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும் அவை பாராளுமன்றத்தின் ஊடாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எனினும் இவற்றிற்கான வேகம் இன்னும் போகாமலும் இருக்கிறது என நினைக்கின்றேன்.
இங்கிருக்கும் கிராமத்தில் உள்ள பெரும்பாலும் மக்களுக்கு இந்த பிரச்சனை தொடர்பாக சரியான முறையில் புரிந்து கொள்ளவில்லை பௌத்த மத அடையாள மாற்ற முயற்சிகள் நடக்கப்படுகிறது என்பதும் அவர்களுக்கு விளங்கவில்லை
இதனால் தங்களுடைய காணிகளையும் சிறிதளவு பணம் கிடைக்கின்றது என்பதால் பிற சமூகத்தவர்களுக்கு காணிகளை விற்பதால் ஏற்படும் அபாயத்தை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து காணிகளை விற்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். அதேபோன்று நல்லூரிலும் காணிகள் விற்கப்படுகிறது.
காணிகளை விற்பதால் சிறிதளவு பணம் கிடைக்கும் என்பதற்காக பிற சமூகத்தவர்களுக்கு காணிகள் விற்பதை நிறுத்துங்கள்.
மேலும் இங்கே கட்டப்பட்டு வரும் பௌத்த விகாரர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது இந்தப் போராட்டத்திற்கு சிறிதளவு பெயருடன் போராட்டங்களை நடத்துவதால் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படாது. இவற்றுக்கு எதிராக அனைவரும் இணைந்து போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று பௌத்த விகாரைகள் கட்டப்படுவது ஒரு பிரச்சனை அல்ல ஆனால் அவை தமிழர்கள் வாழும் இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்படுவது இங்கு குறிப்பிடத்தக்க விடயம்.
அதேபோன்று பௌத்தர்கள் இல்லாத இடங்களில் விகாரை ஒன்றை அமைத்து அந்த விகாரிகளை பேணி பாதுகாப்புக்கும் வகையில் பௌத்தப்பிக்குகளை இங்கு கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்கள் வாழும் பகுதிகளை ஆக்கிரமிக்கப்படுகின்றன.
இந்த அரசாங்கத்திலாவது தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதற்கான எந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.



