அரசாங்கத்தினால் நலன்புரி நன்மைகள், உதவி கொடுப்பனவு பட்டியலில் பெயர்களை இணைத்துக் கொள்ளாமை தொடர்பாக இன்று பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டமானது கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாக பிரிவுக்குட்பட ஓட்டமாவடி, மீராவேட்டை, பதுரியா நகர், மாஞ்சோலை, கவத்தமுனை, ஆகிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பிட்ட போராட்டத்தில் "வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும், ஏழை எளிய வறிய மக்களுக்கு அஸ்வெகம திட்டம் வழங்கப்பட வேண்டும், எடுக்க வேண்டும் எங்கள் கிராமத்தை கவனம் எடுக்க வேண்டும்" போன்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆண்களும் பெண்களும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை செய்துள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தையில் ஆரம்பிக்கப்பட்டு பிரதேச செயலகம் வரை சென்று உதவி பிரதேச செயலாளர் எஸ்.சம்.அல்.அமீனிடம் மகாஜார் ஒன்றையும் கையடிக்கப்பட்டது.



