வவுனியாவில் நலன்புரி உதவி திட்டத்தில் முறைகேடு: மாவட்ட செயலகத்திற்கு முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம்

vavuniya news


அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் நலன்புரி உதவி திட்ட பதிவுகளில் முறைகேடு என தெரிவித்து வவுனியாவில் உள்ள மக்கள் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேசம் செயலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டு மன்னார் வீதி மற்றும் ஏ9 இரண்டு பிரதான வீதிகளையும் முடக்கப்பட்டன.


குறிப்பிட்ட ஆர்ப்பாட்டமானது இன்று (26) காலை ஆரம்பிக்கப்பட்டு மதியத்தையும் கடந்து மேற்கொள்ளப்பட்டது இதனால் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தன



அரசாங்கத்தால் நலன்புரி உதவித் திட்டத்திற்கான பெயர் பட்டியல் வெளியாகி இருந்த நிலையில் இதில் இணைக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் இணைக்கவில்லை அன்றாடம் வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் காணப்படும் இருவேளை உணவு உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள், விதவைகள் உட்பட வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் இதில் அரச உத்தியோகத்தர்கள், வசதி வாய்ந்தவர்கள் ஆகியோருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தே மக்களால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா பிரதேச செயலக வளாகத்தினுள் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் தமக்கு நீதி கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர் இதில் கள்ளிக்குளம், தேக்கவத்தை, நெளுக்குளம், தோனிகல் ஆகிய கிராம மக்கள்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளை வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் போராட்ட இடத்திற்குச் சென்று கேட்டறிந்தது உடன் முறைப்பாடுகளை மேற்கொள்ளும் படியும் இதற்கான நியாயமான முறையில் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் மக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

இருந்த போதும் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வந்து கொண்டிருந்தது வவுனியா பிரதேச செயலாளர் தீர்வு தமக்கு திருப்தியில்லை என தெரிவித்த மக்களால் வவுனியாவில் இருந்து மன்னார் பிரதான வீதியை பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்களால் முடக்கப்பட்டு இருந்ததால் போக்குவரத்து மேலும் தாமதம் நிலை ஏற்பட்டது.



வவுனியா பொலிஸ் உயர் அதிகாரிகளும், கொக்குவெளி இராணுவ முகாம் கட்டளை தளபதியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பல தடவைகள் கலந்துரையாடியும் மக்கள் வீதியினை தொடர்ந்து மறைத்து போராட்டத்தினை தொடர்ந்திருந்தனர்.



இவ்வாறு தொடர்ந்து போராட்டக்காரர்கள் வவுனியா மாவட்ட செயலகத்துக்குள் உள் நுழைந்து மாவட்ட செயலாளரை சந்தித்தனர்.




இந்த நிலையில் அரசாங்க மாவட்ட செயலகத்தின் அரசாங்க அதிபர் போராட்டக்காரர்களை சந்தித்து கலந்துரையாடியதில் அரசாங்கத்தினால் நலம்புரி உதவி திட்ட கொடுப்பனவர்கள் வழங்குவதற்கான பெயர் பட்டியலில் ஆரம்பப் பட்டியல் மாத்திரமே இது. இறுதிப் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை எனவும் இது தொடர்பாக முறைப்பாடுகளை நீங்கள் இணைய மூலம் மேற்கொள்ள முடியும். அல்லது கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு எமது உத்தியோகத்தர்கள் வருகை தரும் போது அவர்களிடம் முறைப்பாடுகளை வழங்குமாறும், இந்த உத்தியோகத்தர்கள் கிராமங்களுக்கு விஜயம் செய்யும் திகதிகளை தெரிவிப்பதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்ததுடன், அதன் பின்னரே இறுதி பட்டியல் வெளியிடப்படும் எனவும் அரசாங்க அதிபர் உறுதிமொழி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கலைந்து சென்றனர்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்