தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



