வவுனியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மக்கள் எரிபொருளை நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
எரிபொருளின் விலை குறைந்த நிலையிலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் தங்கள் வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் நின்று எரிபொருள்களை பெற்றுக் கொண்டனர்.
கடந்த வருடங்களில் மிகவும் சிரமத்தின் மத்தியில் நீண்ட வரிசைகளில் பல நாட்கள் காத்திருந்தும் எரிபொருட்களை பெற்றுக் கொண்ட நிலைமை மீண்டும் வருவதற்கு முன்பே எரிபொருட்களை இன்றைய சேமிக்க தொடங்கி விட்டார்கள்.
எனினும் வவுனியாவில் உள்ள சில எரிபொருள் நிலையங்களில் போதுமான எரிபொருள் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Vavuniya-news



