இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மூலம் 986.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 45.1 வீத அதிகரிப்பாகும். In the first six months of last year, the country earned 679.6 million US dollars from tourists.
கடந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இந்நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் மூலம் 679.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளன.
அத்துடன், இவ்வருடம் ஜுன் மாதம் இந்த நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மூலம் இலங்கை 158.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.