( srilanka tamil news-tamillk ) கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதம் ஒன்றில் பயணித்த பயணி ஒருவரின் தகாத செயலால் , அதே புகையிரதத்தில் பயணம் செய்த இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தனது கைபேசியில் மூலமாக எதிரில் இருந்த யுவதியை தகாத முறையில் குறித்த பயணி காணொளி எடுத்த நிலையில் இவரின் செயல்பாடு அவதானித்துக் கொண்டிருந்த இளைஞர்கள்.
காணொளி
தனது கைத் தொலைபேசியை சூம் பண்ணி யுவதியின் அந்தரங்கப் பகுதியை குறித்த பயணி காணொளி எடுத்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரை நையப்புடைத்த இளைஞர்கள், பெண்ணின் காலை தொட்டு மன்னிப்பும் கேட்க வைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளைங்களில் வெளியாகியுள்ளது.
Tags:
srilanka



