லிந்துலை, தலவாக்கலை பிரதேசத்தில் தோட்டத் தந்தையொருவர் தனது மூன்று வயது சிறுவனை உடலில் வெந்நீரை ஊற்றி பலத்த எரித்து காயப்படுத்தியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (25) முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (24) மாலை சிறு குழந்தை இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதுடன், குடிபோதையில் இருந்த தந்தை, குழந்தையை கொடூரமாக தாக்கி பின்னர் உடலில் வெந்நீரை ஊற்றி எரித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய குழந்தையின் தந்தை நுவரெலியா பிரதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Tags:
srilanka



