திருகோணமலையில் துப்பாக்கி சூடு-இருவர் படுகாயம்

trincomale tamil news-tamillk


திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (3) துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


குறித்து சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம்

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இன்றைய தினம் அதிகாலை இடம் பெற்றுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.



மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இந்த சம்பவத்தின் போது படுகாயம் அடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



குறித்த சம்பவம் தொடர்பாக திருகோணமலை - குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்