க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நெறியை அறிமுகப்படுத்துவது விடயம் குறித்து கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது.
இதற்கமைய, பரீட்சை நிறைவடைந்து பெறுபேறுகள் வெளியாகும் வரையான மூன்று மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தொழிற்பயிற்சி நெறி நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோது இதனைத் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் பாடசாலைகளுக்குள்ளேயே தொழிற்பயிற்சி பாடநெறிகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
உலக சந்தையில் தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் பாடசாலை மட்டத்தில் இவ்வாறான தொழிற்பயிற்சி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.



