முல்லைத்தீவு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர்

Mullaitivu-tamil news-tamillk


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் பதவி வெற்றிடத்திற்கு அமைய புதிய செயலாளராக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய அ. உமா மகேஸ்வரன் நியமிக்கப்பட்ட நிலையில் தனது கடமைகளை இன்று (09.07.2023) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.



முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த க. விமலநாதன் ஓய்வு பெற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பதவி வெற்றிடங்கள் காணப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த க. கனகேஸ்வரன் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.



தற்போது வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த அ. உமா மகேஸ்வரன் கடந்த வாரம் அமைச்சரவையில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக அங்கீகாரம் பெற்ற நிலையில் தனது தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.



இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி. குணபாலன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், முல்லத்தீவு மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்