( vavuniya news-tamillk ) வவுனியா-மூன்றுமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றை நேற்றைய தினம் வவுனியா பொலிஸாரினால் திடீர் சுற்றி வளைப்பு சோதனையில் ஈடுபட்ட போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடுதியில் பாலியல் தொழில் இடம் பெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த விடுதியை திடீர் சுற்றி வளைப்பு சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் விடுதியில் தங்கியிருந்த 20,34 வயதுடைய இரு பெண்களும் போதைப்பொருள்களை பாவித்திருந்துடமையுடன் இவர்களுடன் பாலியல் தொழிலுக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் என குற்றச்சாட்டில் இரண்டு ஆண்கள் உட்பட நால்வரையும் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரின் மருத்துவ அறிக்கையுடன் மேலதிய விசாரணைகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட நால்வரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.