யாழ்ப்பாணம் - தீவக வலய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிபரை ஊர்காவல்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாடசாலையில் வைத்து அதிபர் மாணவியை மிக கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் அதிகமான தழும்புகள் ஏற்பட்டுள்ளன.
மனித உரிமை ஆணைக்குழு விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பத்துள்ள நிலையில், ஊர்காவல்துறை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிபரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அதிபரை நாளை திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நாளை முன்னெடுக்கவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
Tags:
Education



