12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் Rasi palan - Tamillk News

 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் - 15-09-2023

tamillk news


மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.


ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். குல தெய்வ பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். கலை பொருட்கள் சேரும்.


மிதுனம்: புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.


கடகம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

சிம்மம்: மனைவிவழியில் மதிப்பு, மரியாதை கூடும். அழகு, இளமை அதிகரிக்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள்.


கன்னி: காலை 11 மணி முதல் பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். வழக்குகள் இழுபறியாகும்.


துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். லேசாகதலை வலிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது பிள்ளைகளை அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்கவும்.


விருச்சிகம்: குழப்பம் நீங்கி, குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். ஷேர் மூலம் பணவரவு உண்டு.


தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிகவாதிகளுடன் திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.


மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மகனுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.


கும்பம்: காலை 11 மணி முதல் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வர வேண்டிய பணத்தை போராடிப் பெறுவீர்கள். புதிய பதவி தேடி வரும்.


மீனம்: நண்பர்கள், உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். மகளுக்கு திருமணம் கைகூடும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்