மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு! tamillk news

 

tamillk news-srilanka tamil news

நிகவெரட்டிய, ஹுலுகல்ல நீர்த்தேக்கத்தில் குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஆற்றுக்குச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


நிகவெரட்டிய, ஹுலுகல்ல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே  உயிரிழந்துள்ளார்.


இவர் நேற்று முன்தினம் (20) இரவு குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடிப்பதற்காக படகில் தனியாக சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எனினும், நேற்று (21) குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சிலர், குறித்த நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதையும், அந்த சடலத்திற்கு அருகில் மீன்பிடி படகு ஒன்று இருப்பதையும் அவதானித்து அதுபற்றி   பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.


சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், சடலம் தொடர்பில் ஸ்தல விசாரணைகளை முன்னெடுத்தனர்.




இந்த சம்பவம் தொடர்பில் நிகவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்