![]() |
சட்ட விரோதமான கசிப்பு உற்பத்தியாளர்களை துரத்தி பிடிக்கச் சென்ற பொலிஸார் மாயம் ! தீவிர தேடுதல் பணி - Tamillk News |
kilinochchi Tamil news - சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை துரத்திப் பிடிக்கச் சென்ற பொலிஸ் உத்தியாகத்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள புது ஐயங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று அதிகாலை 6.30 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.
அங்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.
அவர்களை துரத்திச் சென்ற மூன்று பொலிஸார்களில் இரண்டு பொலிஸார் மீண்டும் எட்டு முப்பது மணியளவில் அவ்விடத்தில் ஒன்று கூடிய நிலையில் ஒரு பொலிஸ் அதிகாரி காணாமல் போயுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மோப்ப நாய் உதவியுடன் குளத்தின் கால்வாய் மற்றும் காடு போன்ற பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்