13 ஆவது திருத்தச்சட்டத்தை ஆவது நடைமுறைப்படுத்த நாங்கள் உறுதியாக உள்ளோம் - சிவி விக்கினேஸ்வரன் tamillk news

tamillk news


srilanka tamil news - வடக்கு கிழக்கு மாகாணங்களில் பதவி வகிக்கும் நிர்வாக அதிகாரி தொடர்பில் ஒரு மாற்றத்தை கொண்டுவருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். ஆனால் என்ன காரணத்துக்கோ தெரியாது அதை தாமதப்படுத்திக்கொண்டு செல்லப்படுகின்றன என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


இன்றையதினம் ஊடக சந்திப்பு ஒன்றிலே கலந்து கொண்டு உரையாற்றும்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 


இதன்போது வடக்கு கிழக்கில் தமிழ் மொழி அமுலாக்கத்தில் நிர்வாக அதிகாரியாக இருப்பவர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவராகத் தான் தொடர்ந்தும் இருக்கிறார் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், இதிலே நான் காண்பது என்னவென்றால் அவருக்கு ஆதரவளிக்கும் கட்சியிலே இருப்பவர்கள் பல விதத்திலும் அவ்வாறான நல்ல நடவடிக்கைகளிலே இறங்குவதை எதிர்க்கின்றார்கள் என்பது அந்த எதிர்ப்பின் நிமித்தம் இவர் எங்களுக்கு வெளிப்படையாக செய்வதாக சொன்ன விடயங்களை கூட இன்னும் செய்யாமல் இருக்கின்றார்.




பலர் எங்களிடம் நாங்கள் உங்களுக்கு சொன்னமாதிரி ரணில் ஒரு நாளும் இதை செய்யமாட்டார் அதை செய்யமாட்டார் என்று எங்களை குற்றம் கூறுகின்றார்கள். எங்களுக்கு அந்த குற்றங்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 


அவரை கொண்டுவித்து எந்த விதத்திலே சில நடவடிக்கைகளை எடுக்க கூடுமோ அவற்றை செய்யத்தான் வேண்டும். அவற்றை செய்து கொண்டிருக்கிறோம். அவற்றுக்கு யார் யார் நெருக்குதல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களை பிடித்து அவற்றை செய்து கொண்டிருக்கின்றோம். 


அவர் செய்ய மாட்டார் என்று விட்டு ஒரு பக்கத்திலே இருப்பது  வேலை இல்லை. அவர்கள் எப்படியாவது தமிழ் மக்களுடைய வருங்காலத்தை உத்தேசித்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து 


13 ஆவது திருத்தச்சட்டத்தை ஆவது நாங்கள் வலுவாக நடைமுறைப்படுத்த நாங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதை தான் செய்து கொண்டிருக்கின்றோம். அவரைக் கண்டு பேசி அதற்குரிய நடவடிக்கைகளை வருங்காலத்தில் எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்