யாழில், யுவதியை போதைக்கு அடிமையாக்கி கூட்டு பாலியல் வன்புணர்வு - நால்வர் கைது! Tamillk News -Jaffna News

tamilk news-jaffna tamil news
யாழில், யுவதியை போதைக்கு அடிமையாக்கி கூட்டு பாலியல் வன்புணர்வு


 Jaffna Tamil news - யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் 26 வயதான இளம் யுவதியும் 3 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யுவதியை போதைக்கு அடிமையாக்கி அவர்கள் கூட்டு பாலுறவு கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


யாழ் நகரில் சிறுவர்களை இலக்கு வைத்து  ஜஸ் போதைக்கும் அடிமைப்படுத்தும் வலையமைப்பை தேடி சென்ற போலீசாரிடம் இவர்கள் மாட்டிக்கொண்டுள்ளார்கள்.


நேற்று 4 பெரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைதான 26 வயது யுவதி திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பணி புரிகின்றார். 



யாழ் நகருக்கு அண்மையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்று குறித்த விடுதி முற்றுகையிடப்பட்டது. 


பொலிசார் முற்றுகையிட்ட போது அறையொன்றில் யுவதியும் ஆணொருவரும் தங்கி இருந்துள்ளனர். ஏனைய 2 ஆண்களும் அறைக்கு வெளியில் இருந்துள்ளனர்.


அவர்களிடம் இருந்து ஜஸ் போதைப் பொருட்களும் கைப்பற்றப்படட்து. 26- 29 வயத்திற்கிடைப்படட 3 ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.



அவர்கள் இயற்கைக்கு மாறான பாலுறவை கொண்டுள்ளமை விசாரனைகளிலும் மருத்துவ பரிசோதனைகளிலும்  தெரியவந்துள்ளது.


இவ்வாறு கைது செய்யப்பட்ட 4 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்