வவுனியா நகரில் கோர விபத்து - குடும்பஸ்தர் படுகாயம்! vavuniya news

 

வவுனியா நகரில் கோர விபத்து - குடும்பஸ்தர் படுகாயம்! vavuniya news



வவுனியா மன்னார் வீதி பிரதேச செயலகத்திற்கு முற்பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் 


இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது


இன்று (29)
இரவு 10.15 மணியளவில் வவுனியா மன்னார் வீதி வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பாதைசாரி கடவை பகுதியிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது 


முல்லைத்தீவு மின்சார சபையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் குருமன்காடு கலைமகள் மைதானத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து தனது பணி நிமித்தம் முல்லைத்தீவு செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கி நடந்து செல்கையில் அதே திசையில் பயணித்த வேன் ஒன்று வேகக்கட்டுப்பட்டை இழந்து நடந்து சென்றவருடன் மோதியதில் குறித்த பதைசாரி படுகாயமடைந்து வவுனியா பொதுவைத்தியசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் 



குறித்த வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன் மேலதிக விசாரனைகளை வவுனியா தலமை பொலிஸ்நிலைய போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



வவுனியா மன்னார் வீதி கலைமகள் மைதானத்தருகில் தற்காலிகமாக வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 48 வயதுடைய மெளபர் எனும் குடும்பஸ்தரே விபத்தில் படுகாயமடைந்த நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vavuniya tamil news

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்