தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவினால் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஆறு உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னதுவ மற்றும் இமதுவ ஆகிய இடங்களுக்கு இடையிலான 102 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகாமையில் வீதியின் இரு பக்கங்களிலும் உள்ள மலைகள் நேற்றிரவு சரிந்து விழுந்துள்ளன.
அந்த மலைப் பிரதேசங்களில் அதிகம் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று அவதானமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது.
Tags:
srilanka



