யாழ் - வைத்தியசாலையில் திருட்டில்  ஈடுபட்டவர் சிக்கினார் ! jaffna news

jaffna tamil news

jaffnat tamil news


 யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்,


யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் மதுரபெரும தலைமையிலான குழுவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

 திருட்டு தொலைபேசியினை வாங்கிய குற்றச்சாட்டில்

குறித்த தொலைபேசி திருட்டு  சம்பவத்துடன் தொடர்புடைய நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஒருவரும், திருட்டு தொலைபேசியினை வாங்கிய குற்றச்சாட்டில் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவரையும்  யாழ்  குற்றத்தடுப்பு  பிரிவினர் கைது செய்துள்ளனர்.


வைத்தியசாலையில்  கடந்த மூன்று நாட்களுக்குள் திருடப்பட்ட பெறுமதியான தொலைபேசிகளையும் மீட்டுள்ளனர்.




அண்மையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொலைபேசிகளை யாராவது தொலைத்திருந்தால் அவர்களை நேரடியாக வந்து உரிய ஆவணங்களையும், ஆதாரங்களை காட்டி தொலைபேசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என  குற்றத்தடுப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்