srilanka tamil news
15 வயது சிறுமியுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த 21 வயது இளைஞன் ஒருவரை வனாடவில்லுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி கர்ப்பமாகியிருந்த நிலையில், குழந்தையை பிரசவித்து anவைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்தபோது வைத்தியசாலை அதிகாரிகளால் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி, புத்தளம் ஸ்மைல் புரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் போது,
2022 நவம்பரில் குறிப்பிட்ட சிறுமியை வாகரைக்கு அழைத்துச் சென்று கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும்,
பின்னர் வனாத்தவில்லுவ பிரதேசத்திற்கு வந்து இருவரும் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்



