இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் இவ்வருடம் 28 கோடி ரூபா நட்டத்தை சந்தித்துள்ளதாக - பந்துல குணவர்தன தெரிவித்தார் -srilanka news

 

srilanka news

தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கும் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை வானொலி கூட்டுத்தாபனம் என்பன பொது நிறுவனமாக மாற்றப்படும் என அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.


இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் இவ்வருடம் 28 கோடி ரூபா நட்டத்தை சந்தித்துள்ளதாகவும் இலங்கை வானொலி கூட்டுத்தாபனம் இவ்வருடம் 46 கோடி ரூபா நட்டத்தை சந்தித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


இந்த அலைவரிசைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை திறைசேரி தொடர்ந்து வழங்குவது கடினம் என சுட்டிக்காட்டிய திரு.குணவர்தன, இந்த நிறுவனங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.


அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு போதிய விளம்பரம் இல்லை என குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட பொதுமக்களின் சிரமங்களை ஊடகங்கள் ஊடாக ஒளிபரப்புவதுடன், வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்ட பின்னர் மக்களுக்குத் தெரிவிப்பதும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஆலோசனைக் குழு கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அதன் தலைவர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் கூடியது. இந்தத் தகவல் அந்தச் சந்திப்பில் தெரியவந்தது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்