உலகின் மிகப்பெரிய பனிப்பாறை வேகமாக நகரத் தொடங்கியுள்ளது! tamillk news

 

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை வேகமாக நகரத் தொடங்கியுள்ளது! tamillk news

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை வேகமாக நகரத் தொடங்கியுள்ளது.


உலக சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கடலியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பூமியின் மிகப்பெரிய பனிப்பகுதி அண்டார்டிகா என்று அழைக்கப்படுகிறது. இதை தனி கண்டமாக உலக நாடுகள் அடையாளப்படுத்துகின்றன.


பூமியில் அதிக குளிரான பகுதியும் இதுவே. அண்டார்டிகாவில் பல்வேறு பனிப்பாறைகள், பனிப்பாறையில் உண்டான கடற்கரைகள் அமைந்திருக்கின்றன.

உலக நாடுகள் ஆராய்ச்சி செய்யத் தொடங்கின

இந்த நிலையில், அண்டார்டிகாவின் கடற்கரை ஓரப்பகுதி ஒன்று 1986ம் ஆண்டு பிரிந்தது. அது தனி தீவை போல காட்சியளிக்கத் தொடங்கியது.


உலக நாடுகள் அண்டார்டிகாவில் இருந்து பிரிந்த அந்தத் தனி கடல் தீவு பகுதிக்கு A23a என்று பெயரிட்டன. பிறகு அவற்றிற்கான காரணம் குறித்து உலக நாடுகள் ஆராய்ச்சி செய்யத் தொடங்கின. இந்த நிலையில், வெட்டல் கடல் கரை பகுதியில் A23a பனித்தீவு தரைதட்டியது.




இது அண்டார்டிகாவில் இருந்து பிரிந்த மிகப்பெரிய பனிப் பகுதியாகும். இது 4000 சதுர மீட்டர் நீளம் கொண்டது. அதனுடைய தடிமன் 400 மீட்டர் ஆகும்.


1312 அடி ஆகும். இந்த மிகப்பெரிய பனித்தீவு தற்போது மிக வேகமாக நகரத் தொடங்கி இருக்கிறது. இதே நிலை தொடருமானால் மிக விரைவில் அண்டார்டிகா கடல் பகுதியை விட்டு A23a தீவு விலகிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.




உலகின் மிகப்பெரிய இந்தப் பனி தீவு அண்டார்டிகாவிலிருந்து பிரிந்து மற்ற கடல் பகுதிகளை அடையும்பட்சத்தில் அக்கடலின் தன்மை முற்றிலும் மாறுபடும். கடல் வாழ் உயிரினங்களும் மாறுபாட்டை சந்திக்கும்.


இந்தப் பனித் தீவு மிக வேகமாக உருகி நீராக மாறக்கூடிய நிலை ஏற்படும். இதனால் கடல் நீர் மட்டம் அதிவேகமாக உயரும். அதுமட்டுமல்லாது, கடல் நீரின் ஓட்டமும் இதன் மூலம் மாற்றம் காணக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் காற்று அடிக்கும் திசையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று கடலியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்