கிளிநொச்சியில் : உலக மண் தினத்தை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள் சிரமதான பணி முன்னெடுப்பு! kilinochchi news

கிளிநொச்சியில்  : உலக மண் தினத்தை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள் சிரமதான பணி முன்னெடுப்பு! kilinochchi news



 உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5ம் திகதி "உலக மண் தினம்”  கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


அந்தவகையில், உலக மண் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி நகர் பகுதியில் சிரமதான நிகழ்வு இன்று(05) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.


கிளிநொச்சி மாவட்ட செயலகம், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி திணைக்களம், கரைச்சி பிரதேச சபை ஆகியன இணைந்து கிளிநொச்சி நகரின் பிரதான வீதியோரங்களிலுள்ள பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் பணியினை முன்னெடுத்திருந்தனர்.




கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் குறித்த சிரமதான நிகழ்வு நடைபெற்றது.


இதனூடாக கரைச்சி பிரதேச சபை முன்றலில் இருந்து கிளிநொச்சி டிப்போ சந்தியின் A 9 வீதியின் இரு பக்கங்களும் தூய்மையாக்கப்பட்டன.

மக்களுக்கு பூமியின் மகத்துவத்தை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம்


இதன்போது குறித்த பகுதிகளில் காணப்பட்ட பெருமளவான பொலீத்தீன், பிளாஸ்ரிக் பொருட்கள் மற்றும் பார்த்தீனிய செடிகள் அகற்றப்பட்டன.


உலக மண் தினம் பூமியில் மண்ணின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்கள் தொகை விரிவாக்கம் காரணமாக வளர்ந்து வரும் பிரச்சினையை முன்னிலைப்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ம் தேதி உலக மண் தினம் அனுசரிக்கப்படுகிறது.





மேலும், உலக மண் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் மண் பாதுகாப்பு விழிப்புணர்வு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்