இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி!!! srilanka tamil news

 

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி!!! srilanka tamil news

காலி - கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


சிறிய ரக லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்தில் காயமடைந்த  5 பேர்   பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி தூங்கியதால் 

மொரட்டுவ பிரதேசத்தில் கட்டிட  நிர்மாணிப்பதற்காக வந்து பத்தேகமவிற்கு மீண்டும் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


சாரதி தூங்கியதால், லொறி வீதியை விட்டு  விலகி கொன்கிரீட் தூண் ஒன்றில் மோதி கவிழ்ந்தது.




லொறியின் பின்னால் பயணித்தவர்களில் ஒருவர் வாகனத்தில் இருந்த கொங்கிரீட் இயந்திரத்தால் நசுக்கப்பட்டு பலத்த காயமடைந்து பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்