மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (02) கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இண்டிபெத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொரட்டுவ, பஹல இந்திபெத்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞராவார்.
கடந்த 29ஆம் திகதி மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவில் பெண் ஒருவரை சந்தேக நபர் தாக்கி கொலை செய்திருந்ததாக கூறப்படுகிறது.
Tags:
srilanka



