(srilanka tamil news-tamillk) பண்டாரவளை, உடுஹுல்பொத்த பகுதியில் பண்டாரவளை-பதுளை பிரதான வீதிக்கு மேலே உள்ள மண்மேடு சரிந்து வீதியில் விழுந்ததில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இரு வாகனங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளதுடன் இரு வாகனங்கள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இந்த மண்சரிவு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல வாகனங்கள் சேதம்
இரு சொகுசு வாகனங்கள், வேன் மற்றும் ஆட்டோவொன்றே இவ்வாறு மண்சரிவில் சிக்குண்டு சேதமடைந்துள்ளன.
இவ்வாறு சேதமடைந்த வாகனங்களுள் மூன்று, அப்பகுதியில் உள்ள கராஜுக்கு வந்திருந்தவை எனவும், ஆட்டோ அவ்வழியாக பயணித்த வாகனம் எனவும் தெரியவந்துள்ளது.
இரு வாகனங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. இவ்வனர்த்தத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
Malaiyakam